5004.

     சோதி மலையில் கண்டேன் நின்னைக் கண்க ளிக்க வே
          துய்த்தேன் அமுதம் அகத்தும் புறத்தும் பரிம ளிக்க வே
     ஓதி உணர்தற் கரிய பெரிய உணர்வை நண்ணி யே
          ஓதா தனைத்தும் உணர்கின் றேன்நின் அருளை எண்ணி யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     சோதி மலை - அருட் சோதியாய்த் திரண்ட மலை. பரிமளித்தல் - நறுமணம் கமழுதல். பெரிய உணர்வை நண்ணி - பெருமை பொருந்திய திருவருள் ஞானத்தை நல்கி. அனைத்தும் ஓதா துணர்கின்றேன் - எல்லா நூல்களையும் படிக்காமலேயே உணர்ந்து கொள்கின்றேன்.

     (42)