5005.

     ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றி லே
          ஏற்றிக் களிக்க வைத்தாய் அதன்மேல் இலங்கு குன்றி லே
     வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசு மே
          மகிழ்ந்து கொடுத்துப் பின்னும் கொடுத்தாய் மணிப்பொற் காசு மே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் - ஏழு நிலைகள் பொருந்திய தெய்வ மாளிகை. வாழும் பரிசு - வாழும் தன்மை. மதிக்கும் தூசு - கண்டோர் நன்கு மதிக்கத் தக்க உடை. பொற் காசு - பொன்னாலாகிய காசு.

     (43)