5006.

     இந்த உலகில் உள்ளார் பலரும் மிகவும் நன்மை யே
          என்பால் செய்ய வைத்தாய் இதுநின் அருளின் தன்மை யே
     அந்த உலகில் உள்ளார் பலரும் என்னை நோக்கி யே
          அப்பா வாழி எனவும் புரிந்தாய் அடிமை யாக்கி யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     இந்த உலகில் உள்ளார் - இந்த உலகில் வாழ்பவர். என்பால் செய்ய வைத்தாய் - எனக்குச் செய்யும்படி அருளினாய். அந்த உலகில் உள்ளார் - தேவர் உலகில் வாழ்பவர். அடிமையாக்கிப் புரிந்தாய் - என்னை உனக்கு அடியவனாக்கி அருள் செய்தாய்.

     (44)