5007. அழியாக் கருணை அமுத வடிவின் ஓங்கும் சோதி யே
அரசே எனக்குள் விளங்கும் ஆதி யாம்அ னாதி யே
ஒழியாத் துயரை ஒழித்த பெரிய கருணை யாள னே
ஒன்றாய் ஒன்றில் உபய மாகி ஒளிரும் தாள னே.
எனக்கும் உனக்கும்
உரை: அமுத வடிவின் ஓங்கும் சோதி - அமுத மயமாய் விளங்கும் அருட் சோதி. ஆதியாம் அனாதியே - ஆதியும் அனாதியுமாகிய பரம்பொருளே. ஒழியாத் துயர் - பிறவி தோறும் தொடர்ந்து நீங்காது நின்ற துன்பத்தை, “ஒழியாத் துயர்” என்கின்றார். ஒன்றாய் ஒன்றில் உபயமாகி ஒளிரும் தாள் - சிவன் என ஒன்றாகி அவ்வொன்றினிடத்து இரண்டாய் விளங்கும் திருவடிகள். (45)
|