5009. ஐயா நான்செய் பிழைகள் ஏழு கடலில் பெரிய தே
அனைத்தும் பொறுத்த தயவு பிறருக் கரிய தரிய தே
மெய்யா நீசெய் உதவி ஒருகைம் மாறு வேண்டு மே
வேண்டா தென்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டு மே.
எனக்கும் உனக்கும்
உரை: பொறுத்த தயவு - பொறுத்தருளிய பேரருள். பிறருக்கு அரியது - பிறரிடத்து இருப்பதில்லை. கைம்மாறு வேண்டுமே - கைம்மாறு விரும்புமோ. (47)
|