5010. பூதவெளியின் நடமும் பகுதி வெளியின் ஆட்டமும்
போக வெளியில் கூத்தும் யோக வெளியுள் ஆட்ட மும்
நாத வெளியில் குனிப்பும் பரம நாத நடமு மே
நன்று காட்டிக் கொடுத்தாய் என்றும் நலியாத் திடமு மே.
எனக்கும் உனக்கும்
உரை: பூதவெளி - ஐம்பூதங்கள் தங்கும் இடம். பகுதி வெளி - பிரகிருதி தங்கும் இடம். போக வெளி - பூதப் பகுதிகளின் போகம் நுகருமிடம். யோக வெளி - யோகிகள் காணும் பரவெளி. நாத வெளி - நாத தத்துவ வெளி. பரம நாதம் - மாயதீத வெளி. நலியாத் திடம் - கெடாத வலிமை. (48)
|