5013.

     உருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்த னே
          உயிருள் நிறைந்த தலைவ எல்லாம் வல்ல சித்த னே
     மருவும் துரிய வரையுள் நிறைந்து வயங்கும் பரம மே
          மன்றில் பரமா னந்த நடஞ்செய் கின்ற பிரம மே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     உபய நிலை - அருவுருவ நிலை. நித்தன் - என்றும் உள்ளவன். ஆன்மாக்களின் துரியத்தானத்தில் நிறைந்து தோன்றுகின்ற பரம்பொருளை, “மருவும் துரிய வரையுள் நிறைந்து வயங்கும் பரமமே” என்று சொல்லுகின்றார். மன்று - ஞான சபை. பரமானந்த நடம் - மேலான இன்பத்தை அளிக்கும் திருநடனம். பிரமம் - பெரிய பொருள்; பரம்பொருள் எனினும் பொருந்தும்.

     (51)