5014. அன்னே என்னை ஆண்ட தலைவ அடியன் உள்ள மே
அமர்ந்த துணைவ எனக்குக் கிடைத்த அமுத வெள்ள மே
பொன்னே பொன்னில் பொலிந்து நிறைந்த புனித வான மே
புனித வானத் துள்ளே விளங்கும் புரண ஞான மே.
எனக்கும் உனக்கும்
உரை: அன்னே - அன்னையே. அடியேன் உள்ளமே அமர்ந்த துணைவ - அடியவனாகிய என்னுடைய உள்ளத்தில் இருந்தருளும் துணைவனே. பொன்னில் பொலிந்து நிறைந்த புனித வானமே - பொன் வேயப்பட்டு அழகு நிறைந்த தூய சிதம்பராகாசமே. புரண ஞானம் - குறைவின்றி நிறைந்த சிவஞானம். (52)
|