5015. சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்ப தென்ன வே
சாற்றப் புகினும் சாலார் அருளின் பெருமை உன்ன வே
அமையும் அண்டப் பகுதி பலவும் அணுவின் பொடியி லே
அனந்தத் தொன்றென் றுரைத்துஞ் சாலா நின்பொன் னடியி லே.
எனக்கும் உனக்கும்
உரை: சாலார் - பொருந்த மாட்டார். அண்டப் பகுதி - அண்டங்களின் அடுக்கு. அனந்தத்து ஒன்று - அளவில்லாதவற்றில் ஒன்று. (53)
|