5016. அப்பா நின்னை அடைந்த என்னை ஒப்பார் யாவ ரே
ஆறா றகன்ற நிலையை அடைந்தான் என்பர் தேவ ரே
இப்பா ராதி பூதம் அடங்குங் காலும் நின்னை யே
ஏத்திக் களித்து வாழ்வேன் இதற்கும் ஐய மென்னை யே.
எனக்கும் உனக்கும்
உரை: ஆறாறு - முப்பத்தாறாகிய தத்துவம். அவை சிவதத்துவம் ஐந்து, வித்தியா தத்துவம் ஏழு, ஆன்ம தத்துவம் இருபத்து நாலு. பாராதி பூதம் - நிலம் நீர் தீ காற்று ஆகாயம். (54)
|