5017.

     என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னைக் காட்டி யே
          இறைவ நினையும் காட்டி வளர்த்தாய் அமுதம் ஊட்டி யே
     முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னை யே
          முன்னி மகிழ்ந்து பாடப் புரிந்தாய் அடிமை என்னை யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     மறைத்த மறைப்பு - என் அறிவை மறைத்த மூல மலமறைப்பு. முன்னை மறை - பழமையான வேதங்கள்.      (55)