5020. இறுகப் பிடித்துக் கொண்டேன் பதத்தை இனிநான் விடுவ னோ
எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவ னோ
குறுகப் பயந்து கூற்றும் ஓடிக் குலைந்து போயிற் றே
கோவே உன்றன் அருட்சிற் சோதி என்ன தாயிற் றே.
எனக்கும் உனக்கும்
உரை: குலைந்து போயிற்று - கெட்டொழிந்தது. அருட் சிற்சோதி - அருள் மயமாகிய ஞான ஒளி. (58)
|