5021.

     காய்க்கும் பருவம் தன்னைப் பழுத்த பருவம் ஆக்கி யே
          கனக சபையில் நடிக்கின் றாய்ஓர் காலைத் தூக்கி யே
     நாய்க்குத் தவிசிட் டொருபொன் முடியும்நன்று சூட்டி யே
          நட்ட நடுவே வைத்தாய் கருணை அமுதம் ஊட்டி யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     பழுத்த பருவம் - பயன் தரும் காலம். கனக சபை - பொற் சபை. நாய்க்குத் தவிசிட்டு இருக்க வைத்துப் பொன் முடி சூட்டியது போல என்னைச் சிவ பதத்தில் இருக்க வைத்து என் தலையில் சிவஞானத்தை நல்கினாய் என்பது கருத்து.

     (59)