5023.

     சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலை யே
          தனித்துன் அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலை யே
     ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின்பொற் பாத மே
          உலக விடயக் காட்டில் செல்லா தெனது போத மே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     உலக விடயக் காடு - உலக போகம். போதம் - அறிவு.

     (61)