5024.

     அருளும் பொருளும் பெற்றேன் அடிய னாகி நானு மே
          அஞ்சேன் மாயை வினைகட் கொருசிற் றளவ தேனு மே
     இருளும் நிறத்துக் கூற்றைத் துரத்தி அருள்சிற் சோதி யே
          என்றன் அகத்தும் புறத்தும் விளங்கு கின்ற தாதி யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     மாயை வினைகள் - மாயையும் வினைகளுமாகிய செயற்கை மலங்களின் கூட்டம். இவ்விரண்டினையும் ஆகந்துக மலம் என்பதுமுண்டு. சிற்சோதி - ஞான ஒளி.

     (62)