5025.

     காமக் கடலைக் கடந்து வெகுளிக் கடலை நீந்தி னேன்
          கடிய மயக்கக் கடலைத் தாண்டி அடியை ஏந்தி னேன்
     சேமப் பொதுயில் நடங்கண் டெனது சிறுமை நீங்கி னேன்
          சிற்றம் பலத்து நடங்கண் டுவந்து மிகவும் ஓங்கி னேன்.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     வெகுளிக் கடல் - கோபமாகிய கடல். இப்பாட்டில் காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய் என்ற திருக்குறள் அமைந்து கிடப்பது காண்க. சேமப் பொது - நலம் தரும் ஞான சபை.

     (63)