5026.

     தாங்கல் விடுதல் இரண்டும் எனக்குச் சமம தாயிற் றே
          சகத்தில் வழங்கும் மாயை வழக்குத் தவிர்ந்து போயிற் றே
     ஏங்கல் சலித்தல் இரண்டும் இன்றி இளைப்பு நீங்கி னேன்
          எந்தாய் கருணை அமுதுண் டின்பப் பொருப்பில் ஓங்கினேன்.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     தாங்கல் விடுதல் - பொருத்தல் கைவிடுதல். சகத்தில் வழங்கும் மாயை - உலகியல் மயக்கம். இன்பப் பொருப்பு - இன்பம் என்னும் மலை.

     (64)