5027. உறவு பகைஎன் றிரண்டும் எனக்கிங் கொன்ற தாயிற் றே
ஒன்றென் றிரண்டென் றுளரும் பேதம் ஓடிப் போயிற் றே
மறவு நினைவென் றென்னை வலித்த வலிப்பு நீங்கி னேன்
மன்றில் பரமா னந்த நடங்கண் டின்பம் ஓங்கி னேன்.
எனக்கும் உனக்கும்
உரை: ஒன்றென்று உணரும் பேதம் - உறவும் பகையும் ஒன்றென்றும் வேறென்றும் பேசுகின்ற விபரீதப் பேச்சுக்கள். மறவு நினைவு - மறப்பு நினைப்பு. (65)
|