5029. மலத்தில் புழுத்த புழுவும் நிகர மாட்டா நாயி னேன்
வள்ளல் கருணை அமுதுண் டின்ப நாட்டான் ஆயி னேன்
குலத்தில் குறியில் குணத்தில் பெருமை கொள்ளா நாயி னேன்
கோதில் அமுதுண் டெல்லா நலமும் உள்ளான் ஆயி னேன்.
எனக்கும் உனக்கும்
உரை: இன்ப நாட்டான் - இன்பம் நுகரும் சிவஞானி. குறி - பெயர். பொதுவும் சிறப்புமாகிய பெயர்களுமாம். (67)
|