5031.

     அயனும் மாலும் தேடித் தேடி அலந்து போயி னார்
          அந்தோ இவன்முன் செய்த தவம்யா தென்ப ராயி னார்
     மயனும் கருத மாட்டாத் தவள மாடத் துச்சி யே
          வயங்கும் அணைமேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சி யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     அலந்து போயினார் - வருந்தி ஒழிந்தார். மயன் - தேவருலகத்தில் அழகிய மாளிகையை அமைத்துத் தரும் தேவ தச்சன். தவள மாடம் - வெண்மையான மாடங்கள் நிறைந்த மாளிகை.

     (69)