5032.

     வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்த தே
          மலமும் மாயைக் குலமும் வினையும் முழுதும் வெந்த தே
     எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்த தே
          இறவா தென்றும் ஓங்கும் வடிவம் எனக்கு வந்த தே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     மலமும் மாயைக் குலமும் வினையும் முழுதும் வெந்தது - ஆணவ மலமும் சுத்தா சுத்த மாயைகளும் கன்மங்களும் வெந்தொழிந்தன. இறவாது என்றும் ஓங்கும் வடிவம் - என்றும் இறவாமைக்கு ஏதுவாகிய பொன் வடிவம்.

     (70)