5033.

     சிற்றம் பலத்தில் நடங்கண் டவர்காற் பொடிகொள் புல்ல தே
          சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்ய வல்ல தே
     பற்றம் பலத்தில் வைத்தார் தம்மைப் பணியும் பத்த ரே
          பரம பதத்தர் என்று பகர்வர் பரம முத்த ரே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     நடங் கண்டவர் - திருநடனத்தைத் தரிசித்தார். திருவடி நடனம் கண்டபோது அக்காலை எழும் சிறு பொடிகள் பட்ட புல்லும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழிலும் செய்ய வல்லதாம். சிற்றம்பலத்தில் திருவடி தரிசனம் பெற்ற பத்தர்களை, “பரம பதத்தர்” என்றும், “பரம முத்தர்கள்” என்றும் சொல்லுவார்கள் என்பது கருத்து.

     (71)