5034. சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்யென் றென்னை யே
செல்வப் பிள்ளை யாக்கி வளர்க்கின் றாய்இ தென்னை யே
தெருட்டித் திருப்பொற் பதத்தைக் காட்டி அமுதம் ஊட்டி யே
திகழ நடுவைத் தாய்சன் மார்க்க சங்கம் கூட்டி யே.
எனக்கும் உனக்கும்
உரை: செல்வப் பிள்ளை - அருட் செல்வம் நிறைந்த பிள்ளை. தெருட்டி - ஞானத்தால் தெளிவித்து. சன்மார்க்க சங்கம் கூட்டி அமுதம் ஊட்டித் திகழுமாறு அன்பர் நடுவே வைத்தாய்என இயையும். (72)
|