5036.

     அண்ணா எனையும் பொருளென் றெண்ணி இரவும் பகலு மே
          அகத்தும் புறத்தும் திரிகின் றாய்இவ் வுலகென் புகலு மே
     தண்ணா ரமுதம் மிகவும் எனக்குத் தந்த தன்றி யே
          தனியே இன்னும் தருகின் றாய்என் னறிவின் ஒன்றி யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     என் அறிவின்கண் ஒன்றித் தண்ணார் அமுதத்தைத் தந்ததன்றித் தனியேயும் தருகின்றாய் என்பது கருத்து.

     (74)