5037.

     வேதா கமத்தின் அடியும் நடுவும் முடியு மற்று மே
          வெட்ட வெளிய தாகி விளங்கக் கண்டேன் முற்று மே
     நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்டதே முற்று மே
          நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்ட தே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     வேதாகமங்களின் வைதிக ஞானமும் ஆகம ஞானமும் பரசிவ வெளியையே குறிப்பிடுகின்றன என்பாராய், “வேதாகமத்தின் அடியும் நடுவும் முடியும் மற்றுமே வெட்ட வெளியதாகி முற்றும் விளங்கக் கண்டேன்” என முடிக்க. நானோ கண்டேன் கருணை நாட்டம் கண்டதே என்பதற்குக் கருணை காட்டக் கண்டதன்றி நான் கண்டேன் என்பது குறிப்பு.

     (75)