5038.

     புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயி னேன்
          பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயி னேன்
     தழுவற் கரிய பெரிய துரியத் தம்பத் தேறி னேன்
          தனித்தப் பாலோர் தவள மாடத் திருந்து தேறி னேன்.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     பொதுவில் நடிக்கும் தலைவர் - ஞான சபையில் திருநடம் புரிகின்ற சிவன். துரியத்தம்பம் - யோக நெறியில் நிற்பார்க்குத் துரியத் தானம் முதல் துவாத சாந்தம் வரையில் நிற்கும் ஞான ஒளியை யுடைய தூண்.

     (76)