5039. கடையன் எனது கொடிய கடின நெஞ்சக் கல்லை யே
கனிய தாக்கித் தூக்கிக் கொண்டாய் துரியத் தெல்லை யே
உடையாய் துரியத் தலத்தின் மேல்நின் றோங்குந் தலத்தி லே
உன்பால் இருக்க வைத்தாய் என்னை உவந்து வலத்தி லே.
எனக்கும் உனக்கும்
உரை: துரியக் காட்சி எல்லையில் தமது நெஞ்சைக் கொண்டு சென்று துரியத் தம்பத்தின் உச்சியில் தம்மை வைத்ததாக வடலூர் வள்ளல் உரைத்தருளுகின்றார். அஃது அனுபவம் வல்லார்க்கே புலனாகும் என அறிக. (77)
|