5040. அறிந்த நாள்கள் தொடங்கி இற்றைப் பகலின் வரையு மே
அடியேன் பட்ட பாட்டை நினைக்கில் கல்லும் கரையு மே
எறிந்தப் பாடு முழுதும் பெரிய இன்ப மாயிற் றே
எந்தாய் கருணை எனக்கு மிகவும் சொந்த மாயிற் றே.
எனக்கும் உனக்கும்
உரை: கல்லும் கரையுமாறு பட்ட துன்பம் பின்னர் பெரிய இன்பமாயிற்று என்பாராய், “கல்லும் கரைய அடியேன் பட்ட பாட்டை எறிந்து அப்பாடு முழுதும் பெரிய இன்பமாயிற்று” என்று வடலூர் வள்ளல் சொல்லுகின்றார். அவர் பட்ட பாட்டைப் பின்வரும் பாட்டுக்களில் விளக்குகின்றார். (78)
|