5043. பாட்டால் உனது பதத்தை நாடிப் பாடும் வாய ரே
பதியே இந்த உலகில் எனக்கு மிகவும் நேய ரே
நாட்டார் எனினும் நின்னை உளத்து நட்டார் ஆயி லோ
நயவேன் சிறிதும் நயத்தல் கயக்கும் எட்டிக் காயி லோ.
எனக்கும் உனக்கும்
உரை: உளத்து நாட்டாராயின் - உள்ளத்துக் கொள்ளாராயின். நயவேன் - விரும்ப மாட்டேன். (81)
|