5044.

     சின்ன வயது தொடங்கி என்னைக் காக்கும் தெய்வ மே
          சிறியேன் மயங்கும் தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வ மே
     என்னை அவத்தைக் கடல்நின் றிங்ஙன் எடுத்த தெய்வ மே
          எல்லா நலமும் தரும்இன் னமுதம் கொடுத்த தெய்வ மே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     அவத்தைக் கடல் - துன்பக் கடல். இன்னமுதம் - திருவருள் ஞானமாகிய அமுதம்.

     (82)