5045.

     அச்சம் தீர்த்திங் கென்னை ஆட்கொண் டருளும் அமுத னே
     அடியேன் பிழைகள் அனைத்தும் பொறுத்துள் அமர்ந்த அமுத னே
     இச்சை யாவும் முடித்துக் கொடுத்துள் இலங்கும் குரவ னே
     என்றும் இறவாக் கல்வி அடியேற் கீய்ந்த குரவ னே.
                                   எனக்கும் உனக்கும

உரை:

     இச்சை - விரும்பியவை யாவும். உள்ளிலங்கும் குரவன் - உள்ளத்தில் விளங்குகின்ற ஞான தேசிகன். கல்வி ஈய்ந்த குரவன் - கல்வி கற்பித்த ஆசிரியன்.

     (83)