5048.

     சற்றும் வருந்தப் பாரா தென்னைத் தாங்கும் நேய னே
          தான்நான் என்று பிரித்தற் கரிய தரத்து நேய னே
     முற்றும் தனதை எனக்குக் கொடுத்து முயங்கும் நேய னே
          முன்னே நான்செய் தவத்தில் எனக்குள் முளைத்த நேய னே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     சிவமாந் தன்மை எய்தினமை புலப்பட, “தான் நான் என்று பிரித்தற்கரிய தரத்து நேயன்” என்று கூறுகின்றார். தன்னைத் தரிசித்த ஆன்மாவைத் தானாக்கித் தன்னைத் தரும் பரன் என்று ஞான சம்பந்தர் முதலியோர் கூறுவதுபோல, “முற்றும் தனதை எனக்குக் கொடுத்து முயங்கும் நேயனே” என்று கூறுகின்றார்.

     (86)