5050. பொன்னே நின்னை உன்ன உடம்பு புளகம் மூடு தே
பொதுவைக் காண உள்ளே ஆசை பொங்கி ஆடு தே
என்னே பிறர்தம் வரவு நோக்கக் கண்கள் வெதும்பு தே
எந்தாய் வரவை நினைக்கக் களிப்புப் பொங்கித் ததும்பு தே.
எனக்கும் உனக்கும்
உரை: பொன்னே - பொன்னிறம் கொண்ட சிவபெருமானே. பொது - ஞான சபை. சிவனைத் தவிர பிறரைக் காணத் தமது கண்கள் வருந்துவதை, “என்னைப் பிறர்தம் வரவு நோக்கக் கண்கள் வெதும்புதே” என்று விளம்புகின்றார். (88)
|