5051. மணியே நின்னைப் பொதுவில் கண்ட மனிதர் தேவ ரே
மனிதர் கண்ணிற் பட்ட புல்லும் மரமும் தேவ ரே
அணியே நின்னைப் பாடும் அடியர் தாமோ மூவ ரே
அவரைக் கண்டார் அவரைக் கண்டார் அவர்கள் மூவ ரே.
எனக்கும் உனக்கும்
உரை: பொதுவில் - ஞான சபையில். ஞான சபையில் கூத்தப் பெருமானைக் கண்டு இன்புறுபவர் மக்களாயினும் அவர் கண்களால் காணப்பட்ட புல்லும் மரமும் தேவராம் என்று கூறுகின்றார். மூவர் - அயன், திருமால், உருத்திரன். அவரைக் கண்ட மூவர் - வித்தியேசுரர், மந்தரேசுவரர், அனந்தேசுவரர் ஆகிய மூவர்களாவர். (89)
|