5052. வாழ்வே நினது நடங்கண் டவரைச் சுத்தர் என்ப னோ
மலங்கள் மூன்றும் தவிர்த்த சுத்த முத்தர் என்ப னோ
ஏழ்வே தனையும் நீக்கி வாழும் நித்தர் என்ப னோ
எல்லாம் செய்ய வல்ல ஞான சித்தர் என்ப னோ.
எனக்கும் உனக்கும்
உரை: நடங் காண்பவர் இயல்பாகவே சுத்தராதலின் மலம் மூன்றும் தவிர்ந்த செயற்கைச் சுத்தரை, “சுத்த முத்தர்” என்கின்றார். ஏழ் வேதனை - ஏழ்வகைப் பிறவி நோய். (90)
|