5053.

     சிவமே நின்னைப் பொதுவில் கண்ட செல்வர் தம்மை யே
          தேவர் கண்டு கொண்டு வணங்கு கின்றார் இம்மை யே
     தவமே புரிந்துநின்னை உணர்ந்த சாந்த சித்த ரே
          தகும்ஐந் தொழிலும் தாமே இயற்ற வாய்ந்த சித்த ரே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     தவத்தால் உன்னை உணர்ந்த சாந்தர்களாகிய சித்தர்கள் படைத்தல் முதலிய ஐவகைத் தொழில்கள் செய்ய வல்ல சுத்தராவர் என்பது கருத்து.

     (91)