5054.

     ஐவ ராலும் நின்னை அறிதற் கருமை அருமை யே
          ஆரே அறிவர் மறையும் அறியா நினது பெருமை யே
     பொய்வ ராத வாய்கொண் டுன்னைப் போற்றும் அன்ப ரே
          பொருளே நின்னை அறிவர் அவரே அழியா இன்ப ரே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     ஐவராவர் - அயன், திருமால், உருத்திரன், சதாசிவன், மகேசுவரன். இந்திரன், திருமால், முருகன், காளி, வருணன் என்ற ஐவருமாம்.

     (92)