5055.

     என்னைக் காட்டி என்னுள் இலங்கும் நின்னைக் காட்டி யே
          இறங்கா நிலையில் ஏற்றி ஞான அமுதம் ஊட்டி யே
     பொன்னைக் காட்டிப் பொன்னே நினது புகழைப் பாடி யே
          புந்தி களிக்க வைத்தாய் அழியா தென்னை நாடி யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     புந்தி களிக்க வைத்தாய் - மனம் களிக்க வைத்தாய். பொன்னைக் காட்டி - பொன்னிறத்தைக் காட்டி.

     (93)