5056.

     அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தி யே
          அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றில் உள்ள செய்தி யே
     பிண்ட கோடி முழுதும் காணப் பெற்று நின்னை யே
          பேசிப் பேசி வியக்கின் றேன்இப் பிறவி தன்னை யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் - அண்ட கோடிகள் எல்லாவற்றையும் காணக் கூடிய ஞானக் காட்சி. பிண்ட கோடி - சிறு சிறு அணுக்களாக இருக்கும் தொகுதிகள்.

     (94)