5057.

     சிற்றம் பலத்தின் நடனம் காட்டிச் சிவத்தைக் காட்டி யே
          சிறப்பாய் எல்லாம் வல்ல சித்தித் திறத்தைக் காட்டி யே
     குற்றம் பலவும் தீர்த்தென் தனக்கோர் முடியும் சூட்டியே
          கோவே நீயும் என்னுள் கலந்து கொண்டாய் நாட்டி யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     சிற்றம்பலத்தில் நடனம் - ஞான சபையில் நிகழும் நடனம். சிவஞானமாகிய திருமுடியைத் தனக்குச் சூட்டித் தன்னுட் கலந்துகொண்டார் என்ற குறிப்பு விளங்க, “எனக்கோர் முடிசூட்டி என்னுள் கலந்து கொண்டார்” என்று கூறுகின்றார்.

     (95)