5058. சுத்த நிலையின் நடுநின் றெங்கும் தோன்றும் சோதி யே
துரிய வெளியைக் கடந்தப் பாலும் துலங்கும் சோதி யே
சித்தர் உளத்தில் சுடர்செய் தோங்கும் தெய்வச் சோதி யே
சிற்றம் பலத்தில் நடஞ்செய் தெனக்குள் சிறந்த சோதி யே.
எனக்கும் உனக்கும்
உரை: எல்லாத் தத்துவங்களையும் கடந்த நிலை சுத்த நிலை யாதலால் சிவத்தை, “சுத்த நிலையின் நடுநின்று விளங்கும் சோதி” என்று சொல்லுகின்றார். துரியாதீதத்தில் காட்சி தரும் பரம்பொருளாதல் பற்றி, “துரிய வெளியைக் கடந்து அப்பாலும் துலங்கும் சோதி” என்று சொல்லுகின்றார். (96)
|