5059.

     அன்றே என்னை அடியன் ஆக்கி ஆண்ட சோதி யே
          அதன்பின் பிள்ளை ஆக்கி அருள்இங் களித்த சோதி யே
     நன்றே மீட்டும் நேயன் ஆக்கி நயந்த சோதி யே
          நானும் நீயும் ஒன்றென் றுரைத்து நல்கு சோதி யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     நேயன் - அன்பன்; ஞானம் நிறைந்தவன் என்றும் பொருள்படும்.

     (97)