5060.

     நீயே வலிந்திங் கென்னை ஆண்ட நீதிச் சோதி யே
          நின்னைப் பாட என்னை வளர்க்கும் நிமலச் சோதி யே
     தாயே எனவந் தென்னைக் காத்த தருமச் சோதி யே
          தன்மை பிறரால் அறிதற் கரிய தலைமைச் சோதி யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     நிமலச் சோதி - மலசம்பந்தம் இல்லாத அருட் சோதி. அறியாமையை ஒழிய பிறவற்றுக்குத் தீங்கு செய்யாமல் ஒடுக்குதல் பற்றிச் சிவத்தை, “தருமச் சோதி” என்று போற்றுகின்றார். தன்மை பிறரால் அறிதற் கரியன் என்று சான்றோரால் பாராட்டப்படுவதுபற்றி, “தன்மை பிறரால் அறிதற் கரிய தலைமைச் சோதி” என்று புகழ்கின்றார்.

     (98)