5061.

     சாகாக் கல்வி எனக்குப் பயிற்றித் தந்த சோதி யே
          தன்னேர் முடிஒன் றெனது முடியில் தரித்த சோதி யே
     ஏகாக் கரப்பொற் பீடத் தென்னை ஏற்று சோதி யே
          எல்லாம் வல்ல சித்தி ஆட்சி ஈய்ந்த சோதி யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     சாகாக் கல்வி - என்றும் சாகாமைக்கு ஏதுவாகிய வித்தை. அஃதாவது, பஞ்சபூதப் பரிணாமமாகிய பூதவுடம்பைப் பொன் உடம்பாக்கிப் பின்னர் அதனைச் சாகாத் தெய்வ உடம்பாக்குதல். ஏகாக் கரப் பொற் பீடம் - பிரணவாகாரமாகிய ஓர் எழுத்து ஒரு பீடம்.

     (99)