5062. சோதி எவையும் விளங்க விளங்கும் சோதி வாழி யே
துரிய வெளியின் நடுநின் றோங்கும் சோதி வாழி யே
சூதி லாமெய்ச் சிற்றம் பலத்துச் சோதி வெல்க வே
துலங்கப் பொன்னம் பலத்தில் ஆடும் சோதி வெல்க வே.
எனக்கும் உனக்கும்
உரை: யோகியரது துரிய நிலையாகிய உந்தியில் காட்சி தருவது பற்றி, “துரிய வெளியின் நடுநின்று ஓங்கும் சோதி” என்று போற்றுகின்றார். (100)
|