5063.

     சுத்த சிவசன் மார்க்க நீதிச் சோதி போற்றி யே
          சுகவாழ் வளித்த சிற்றம் பலத்துச் சோதி போற்றி யே
     சுத்த சுடர்ப்பொற் சபையில் ஆடும் சோதி போற்றி யே
          சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றி யே.

          எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ
          இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ.

உரை:

     சுத்த சிவ சன்மார்க்க நீதி - சுத்த சன்மார்க்க சங்க நீதி. சுடர்ப் பொற் சபை - விளங்குகின்ற ஞான சபை.

     (101)