5077.

          சகல கலாண்ட சராசர காரண
          சகுண சிவாண்ட பராபர பூரண

உரை:

     கலாண்ட சராசர காரண - நிவிர்த்தி முதலிய கலைகளில் உள்ள அண்டங்களுக்கும் அவற்றில் வாழும் சராசரங்களுக்கும் காரணம் ஆனவனே. சகுணன் - குணங்களோடு கூடியவன். சிவாண்டம் - சாந்தி அதீதையாகிய சிவகலையில் உள்ள அண்டங்கள்.

     (14)