5122.

          கனகா கரபுர ஹரசிர கரதர
          கருணா கரபர சுரவர ஹரஹர.

உரை:

     கனகாகர புரஅர - பொன் மயமான முப்புரத்தை எரித்தவன். கருணாகர பரசுரவர - மேலான தேவர்கள் வேண்டும் வரங்களைத் தருபவனே.

     (59)