5133.

          அபயவ ரதகர தலபுரி காரண
          உபய பரதபத பரபரி பூரண.

உரை:

     சுகங்களையும் வரங்களையும் புரிந்தருளுகின்ற கைகளையுடைய காரணப் பெருமானே. இரண்டாகிய திருவடிகளைத் தேர்களாக உடைய பரிபூரணமானவனே.

     (70)