5137.

          அனந்தகோ டிகுண கரகர ஜொலிதா
          அகண்டவே தசிர கரதர பலிதா.

உரை:

     அளவிறந்த கோடிக் கணக்கான குணங்களால் விளங்குபவனே. அளவில்லாத வேதங்களின் உச்சியில் பெறலாகும் பயன்களைப் பெறச் செய்பவனே.

     (74)